வாக்காளர்களில் விழுந்து கெஞ்சி.. கும்பிட்ட வேட்பாளர்.! ஈரோடு தேர்தல் ஃபயர்.! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈவேரா கடந்த ஜனவரி 4-ல் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது வரும் பிப்ரவரி 27 இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 

இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் இரண்டில் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் சார்பில் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில், தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்களது தரப்பு வேட்பாளர்களை அறிவித்துவிட்டு பின்வாங்கி உள்ளார்கள். 

இந்த நிலையில், தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமானது துவங்கியுள்ளது. இதில், தேமுதிக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஆனந்த் சூரம்பட்டி பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது வாக்காளர்களின் காலில் விழுந்து, விழுந்து எழுந்து அவர் தனக்கு ஓட்டு போடும் படி கேட்டுக் கொண்டார். இந்த ஒருமுறை தனக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கையெடுத்து கெஞ்சி அவர் கேட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode Election dmdk Candidate beg Votes


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->