இரண்டே நாளில் இத்தனை பேர் வேட்புமனு தாக்கலா! கலைக்கட்டும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! - Seithipunal
Seithipunal



வரும் 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மீனாட்சிசுந்தரனார் சாலையில் அமைந்துள்ள ஈரோடு மாநகராட்சியின் பிரதான கட்டடத்தின் ஆணையர் அறையில் நடைபெறுகிறது.

முதல் நாளான நேற்று காலை முதல் வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள்  4 பேர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அரசியல் கட்சியினர் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

இதில், சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த 'தேர்தல் மன்னன்' என்று அழைக்கப்படும் பத்மராஜன் (வயது 65), கோவை, சுந்தராபுரத்தை சேர்ந்த சுய தொழில் செய்து வரும் நூர்முகம்மது (வயது 63) என்பவரும், நாமக்கல், மேற்கு பாலப்பட்டியை சேர்ந்த காந்தியவாதி ரமேஷ் (வயது 42), திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தேவராயன்பாளையத்தை சேர்ந்த ராமு என்பவற்றின் மனைவி தனலட்சுமி (வயது 41) என்பவர் மனுத்தாக்கல் செய்தார். 

இப்படியாக முதல் நாளில் 4 பேர் மட்டும் மனுத்தாக்கல் செய்தனர். 6 பேரின் வேட்பு மனுவில்  குறைபாடு இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல்  இன்று இரண்டாவது நாளாக நடந்தது. இன்று தேமுதிக வேட்பாளர் ஆனந்த் உட்பட 5 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

நேற்று 4 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்த நிலையில், இன்று மேலும் 5 பேர் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erodebyelection2023 nomination erode election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->