#BREAKING | தீவிர ஆலோசனையில் எடப்பாடி பழனிச்சாமி - நாளை நடக்க உள்ள முக்கிய நிகழ்ச்சி! - Seithipunal
Seithipunal


பல்வேறு சிக்கல், வழக்குகளுக்கு பின், ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார்.

மேலும், நேற்று முதல் அதிமுகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும், அதிமுகவின் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக ஈரோடு வில்லரசம்பட்டியில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் இபிஎஸ் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நாளை ஈரோட்டில் நடைபெறுகிற உள்ள நிலையில், வில்லரசம்பட்டி தனியார் விடுதியில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, ராஜேந்திர பாலாஜி மற்றும் வேட்பாளர் தென்னரசு உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ErodeEastByPolls ADMK EPS


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->