ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட மு.க ஸ்டாலினின் விருப்பம்..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமகன் ஈவேரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்புடன் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தது. 

இந்த நிலையில் நேற்று இரவு திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஈரோடு இடைத்தேர்தல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் முடிவில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஒதுக்கப்பட்டது. இதனிடையே நேற்று நடைபெற்ற பேச்சு வார்த்தையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டும் என தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.

இதனை காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS Elangovan Contest in Erode East By election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->