தீவிர சிகிச்சையில் இளங்கோவன் - நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் சென்னை மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

நுரையீரல் சளி காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல்நிலை குறித்து சுமார் 15 நிமிடங்கள் மருத்துவர்களிடம் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். 

அவருடன் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம் மற்றும் எ.வ. வேலு ஆகியோரும் உடனிருந்தனர். 

முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மருத்துவர்களிடமிருந்து இளங்கோவனின் சிகிச்சை நிலை குறித்து முழுமையான தகவல்களை பெற்றனர்.

தற்போது இளங்கோவன் உடல்நிலை பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS Elangovan heath update cm stalin meet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->