பாஜக எங்களின் எதிரியாக இருந்தாலும், அவர்கள் செய்த இந்த நல்ல காரியத்திற்கு நன்றி கூற வேண்டும் - காங்கிரஸ் முன்னாள் முதல்வர்!
Ex CM Narayanasamy Thanks To BJP Govt
7 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை வரவேற்பதாக, புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி தெரிவிக்கையில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு நான் நின்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய பாஜக அரசு மீது எங்களுக்கு பல்வேறு விமர்சனங்கள் உள்ளது. ஆனால், எண்களின் எதிரிகளே நல்லது செய்தால் பாராட்ட வேண்டும்" என்றார்.
மேலும், புதுச்சேரி அரசு குறித்து பேசிய நாராயணசாமி, "பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் கூட 10% இட ஒதுக்கீடு நடைமுறைபடுத்தவில்லை. அதேபோல், புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி நடைமுறைப்படுத்த கூடாது என்று வலியுறுத்தி கொள்கிறேன்.
சென்னையில் பிடிப்பட்ட வெடிகுண்டுகள் முதலியார்பேட்டையில் தயார் செய்யப்பட்டது என்று, சென்னை போலீசார் செய்த விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இது புதுச்சேரி போலீசாரின் செயல்பாடுகள் திறமையின்மையை காட்டுகிறது.
புதுச்சேரியில் சாலை ஓரம் பேனர் வைக்க தடை சட்டம் அமலில் உள்ளது. ஆனால், சாலை ஓரம் வைக்கப்படும் பேனர்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது" என்று நாராயணசாமி தெரிவித்தார்.
English Summary
Ex CM Narayanasamy Thanks To BJP Govt