மேற்கு வங்கம், ஆந்திரா மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு - காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


இந்திய பாராளுமன்றத்தின் பதினெட்டாவது மக்கலவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஒவ்வொரு பகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறுதினம் நடைபெற உள்ளது. அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதற்கான அனைத்த ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த 2 மாநிலங்களிலும் தேர்தல் தொடர்பான வன்முறை ஏற்பட்டதால் வாக்குகள் எண்ணப்பட்டு 15 நாட்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

extra security to west bengal and andira state


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->