ஆயிர கணக்கில் போலி ஆதார் அட்டைகள்.! 10 வருடமாக போக்கு காட்டிய குற்றவாளி கைது.! - Seithipunal
Seithipunal


7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதார் அட்டைகளை மோசடியாக தயாரித்து விநியோகித்த நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தெலங்கானா : சைபர் கிரைம் காவல்பிரிவிற்கு ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக போலியாக ஆதார் அட்டைகள் விநியோகம் நடந்துவருவதாக  புகார் வந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், 8 பேரை கைது செய்து அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

கிடைத்த தகவலின்படி, இதற்கு மூளையாக செயல்பட்ட பவன் கோட்டியா எனும் நபரை மத்தியப்பிரதேசத்தில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அம்மாநில போலீசாரின் உதவியுடன் பவனை கைது செய்து அவனிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பவன் ஆதார் அட்டைகளைத் தயாரித்து விநியோகித்து வருவது தெரியவந்தது.

மேலும், போலீசாரிடம் இருந்து தப்பிப்பதற்காக தனது இருப்பிடத்தை அவன் மாற்றி வந்ததும் தெரிய வந்தது. முக்கியமாக பவன் அவனுடைய நண்பன்  நோஹித்துடன் இணைந்து அசாமில் 2016ஆம் ஆண்டு ஆதார் அட்டை தயாரித்து விநியோகித்தது வந்துள்ளார் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fake aadhar culprit arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->