பதவி பறிப்பு! பாஜகவிலிருந்து கூண்டோடு ராஜினாமா! அதிர்ச்சியில் அதிர்ச்சியில் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நபருக்கு பொறுப்பு வழங்கிய மாநிலத் தலைமையின் முடிவுக்கு உடன்பாடு இல்லாததால், வேலூர் மாவட்டத் பாஜக தலைவர், நிர்வாகிகள் பலரும் விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்த அந்த அறிவிப்பில், "வேலூர் மாவட்ட மையக்குழு (தலைவர், பொது செயலாளர்கள் மற்றும் பொருளாளர்) பணிவுடன் தெரிவித்து கொள்வது, கடந்த மூன்றாண்டு காலமாக எங்களுக்கு இந்த பொறுப்பினை வழங்கி கவுரவ படுத்தியதற்கு நன்றி. கடந்த சில நாட்களாக நம்முடைய கட்சியின் தேர்தல் பணிகள் நடைபெற்று முடிந்தது,இப்பணியை நாங்கள் சிறப்பாக செய்து முடித்து கொடுத்துளோம். 

இன்று மாலை 3 மணிக்கு புதிய மாவட்ட தலைவர் அறிவுப்பு வரும் நிலையில், தற்பொழுது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படும் நபர், முன்னாள் நிர்வாகிகள் ஒருங்கிகிணைப்பு குழுவிற்கு தலைமை வகித்து கட்சிக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தவர்.

கட்சியின் வளர்ச்சிக்கும், கட்சிக்காக உழைத்த தொண்டர்களின் எண்ணத்திற்கும் எதிரான இந்த நியமனத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால், மிகுந்த வருத்தத்துடன் எங்கள் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கின்றோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

இது நாள் வரை தமிழக பாஜக எங்களுக்கு அளித்த வாய்ப்பிற்கும், அங்கீகாரத்திற்கு தெரிவித்துக்கொள்கின்றோம்" என்று அந்த அறிவிப்பில் முன்னாள் மாவட்ட தலைவர், மாவட்ட பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore BJP leader resign Annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->