ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்துள்ளது..! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் வி.சி.சந்திரகுமாரும்,நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.வெ.க.,
உள்ளிட்ட கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் , நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோர் இன்று தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர் .

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 59 வேட்பாளர்கள் 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது.

அத்துடன், வேட்புமனு வாபஸ் பெற வருகிற 20 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் வெளியிடப்படும். மேலும், அடுத்த மாதம் பிப்ரவரி 05 ஆம் தேதி வாக்குப்பதிவும், 08ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Filing of nominations for Erode East by election complete


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->