35 பேர் கைது! கொந்தளிப்பில் தமிழகம்! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
fishermen arrest TN Chief Minister letter Union Minister Jaishankar
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற 32 மீனவர்கள் 23.02.2025 அன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளக் கோரியுள்ளார்.
கடிதத்தில், கடந்த சில மாதங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து கைது செய்யப்படுவது கவலைக்குரியதாக இருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 119 மீனவர்களும் 16 படகுகளும் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை அரசை கடுமையாக வலியுறுத்தி மீனவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு முந்தைய கோரிக்கைப்படி இரு நாடுகளின் கூட்டுப் பணிக்குழு உடனடியாக சந்தித்து நிரந்தரத் தீர்வை உருவாக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களும், அவர்களின் படகுகளும் விரைவாக விடுவிக்கப்படுவதற்கான தூதரக முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
fishermen arrest TN Chief Minister letter Union Minister Jaishankar