#பரபரப்பு தகவல்.. தமிழக ஆளுநர் மாற்றம்..? புதிய ஆளுநர் இவரா.?!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக தற்போதைய ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டப்பேரவை அவை குறிப்பை படித்த போது ஆளுநர் ஆர்.என். ரவி அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில் சில வார்த்தைகளை தவிர்த்து விட்டார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையாகியது.

இந்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு திமுக எம்பிக்கள் கடிதம் எழுதி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, ஆளுநர் ஆர்.என் ரவி டெல்லிக்கு சென்று குடியரசுத் தலைவரை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பினார். மேலும், ஆளுநர் ஆர்.என். ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி அமைச்சகத்துக்கு பரிந்துரைத்தார். 

இத்தகைய நிலையில், தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதன்படி, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஒடிசாவின் தற்போதைய ஆளுநராக இருக்கும் கணேஷி லால் பதவி ஏற்க உள்ளதாக ஒரு பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ganrshi lal may New Governor To Tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->