"ஆருத்ரா" நிறுவனத்தின் பணம்.. பாஜகவினருக்கு "ஸ்வீட் பாக்ஸ்".. அண்ணாமலையை ரவுண்டு கட்டும் காயத்ரி.!!
Gayathri alleges Arudhra company fraud money is being given to BJP members
அண்ணாமலையை அடுத்த முதல்வர் என்று முத்தமிட்டு புகழ் பாடினால் போதும் கொள்ளையர்கள் பாதுகாக்கப்படுவார்கள்..!!
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்ட் டிரேடிங் என்ற நிறுவனம் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 13 கிளைகளை தொடங்கி பொதுமக்களிடம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் 2500 கோடி ரூபாய் முறைகேடு செய்தது அம்பலமானது.
ஆருத்ரா நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்படுவதை தவிர்ப்பதற்காக ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவனான பாஜக நிர்வாகி ஹரிஷ் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை அடுத்து கடந்த மார்ச் 24ஆம் தேதி பாஜக நிர்வாகி ஹாரிஸ் மற்றும் நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான நாராயணன் என்பவரையும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஆருத்ரா நிறுவனத்தின் பண மோசடி வழக்கில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமானவரும் நடிகருமான ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக ஆர்.கே சுரேஷ் கடந்த 2 மாதங்களாக வெளிநாட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இதனையில் நடிகர் ஆர்.கே சுரேஷ்க்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் ஆருத்ரா நிறுவனம் மோசடி குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். நேற்று இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "பலர் என்னை அரசியல் அனாதை என்று அழைத்தனர். நான் பாஜகவில் இருந்து விலகியதில் அண்ணாமலையுடன் வார் ரூம் கூட மகிழ்ச்சியாக இருந்தது. அண்ணாமலை போன்ற மோசடி கும்பல் தலைவரை பின்பற்றுவதை விட தனியாக போராடுவேன். போலி, பொய்யர், மோசடி அண்ணாமலைக்கு எதிராக தனித்து நிற்பதற்கு நான் பெருமைப்படுகிறேன்" என பதிவிட்டிருந்தார்.
காயத்ரி ரகுராமின் இத்தகைய கருத்துக்கு தமிழக பாஜகவில் உள்ள அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்றும் ஆருத்ரா நிறுவன மோசடி குறித்து காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் "மக்கள் பணத்தை கொள்ளையடிப்பது சில பாஜகவினருக்கு ஸ்வீட் பாக்ஸ் ஆகிவிட்டது. அண்ணாமலையை அடுத்த முதல்வர் என்று முத்தமிட்டு புகழ் பாடினால் போதும், கொள்ளையர்கள் பாதுகாக்கப்படுவார்கள் மற்றும் பல மோசடிகளை காப்பாற்ற பதவி வழங்கப்படும். இதில் அமர், தன்னை கைது செய்வது பாஜகவுக்காக உயிர் தியாகம் செய்வது போன்று சொல்லி இருக்கிறார். அந்த ஒரு நபர் பாஜகவில் உள்ள எல்லாரையும் அவரை போல் ஒரு மோசடி செய்பவர்கள் என்று சொல்கிறாரா? அவமானம்." என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராமின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
English Summary
Gayathri alleges Arudhra company fraud money is being given to BJP members