பல ஆயிரம் கோடி மோசடி.. அண்ணாமலைக்கும் லண்டன் MPக்கும் என்ன தொடர்பு.? கொளுத்தி போட்ட காயத்ரி ரகுராம்.!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 6 நாள் பயணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு சென்றிருந்தார். இந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு விமானம் மூலம் நாடு திரும்பிய அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் பொழுது லண்டன் பயணம் குறித்தான பல்வேறு விஷயங்களை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர் ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை ரகசியமாக சந்தித்ததாக திமுகவினரால் பேசப்படுகிறதே என கேள்வி எழுப்பினார். இதனால் டென்ஷனான அண்ணாமலை, உங்களுக்கு யார் தகவல் கொடுத்தது. முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னாரா? இல்ல அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் சொன்னாரா? இது முட்டாள்தனமான கேள்வி, எட்டாம் வகுப்பு படிக்கும் பையனைப் போல கேள்வி கேட்டக் கூடாது, ரோட்டில் நின்றி டீ குடித்துக்கொண்டிருப்பவர் போல கேட்கக் கூடாது ஏன் அந்த செய்தியாளரை கடுமையாக தாக்கி பேசினார். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் லண்டன் சென்ற அண்ணாமலைக்கும் பல்லாயிரம் கோடி மோசடி செய்த நிறுவனத்தினால் பலன் அடைந்தவருக்கும் என்ன தொடர்பு என கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "அண்ணாமலை Jun 27, 2023 அன்று பிரிடீஷ் House of Lords:-

அண்ணாமலைக்கு இந்த Martyn Day என்ற MP க்கும் என்ன தொடர்பு?. பின்பு யார் இவர்களுக்கு இடையே தரகராக செயல்பட்டது?  கோல்ட்வின் ஜூவல்லர்ஸ் நிறுவனம் யார்? அவர்களுக்கு அண்ணாமலையின் தொடர்பு என்ன தேவை உள்ளது? 

Source சொன்னது :- Martyn Day பின்புலத்தில் இருப்பது இந்தியாவில் பல ஆயிரம் கோடி மோசடியில் ஈடுபட்ட Goodwin Jewellers என்ற நிறுவனத்தின் மூலம் ஆதாயம் அடைந்தவர் என்பது உண்மையா?. பின் எப்படி?" என்ற கேள்வியோடு இது குறித்தான தகவல்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் காயத்ரி ரகுராம் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri asked What is the connection between Annamalai and MartinDay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->