ஆருத்ரா மோசடியில் டோட்டல் டேமேஜ்.."மேனேஜர் ஆச்சே, விட்டுக் கொடுக்க முடியுமா? வறுத்தெடுக்கும் காயத்ரி..!!
Gayathri Raguram has severely criticized Annamalai
பணம் கொடுத்த விளம்பரம்..!! டெல்டா நிலக்கரியை தடை செய்யவில்லை என்றால் பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது..!!
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதி அறிவிக்கப்பட்ட நிலையில் தஞ்சை மாவட்டம் வடசேரி பழுப்பு நிலக்கரி திட்டம், கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு கிழக்கு நிலக்கரி திட்டம், அரியலூர் மாவட்டம் மைக்கேல் பட்டி நிலக்கரி திட்டம் என்ற பெயரில் மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாமக உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும், தமிழக விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்
அதேபோன்று தற்பொழுது நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து அரசியல் கட்சிகளும் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில் அதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். இந்த நிலையில் புதிய நிலக்கரி சுரங்கம் ஏலத்திற்கு தமிழகத்தின் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "மத்திய அமைச்சர் திரு ஜோசி ப்ரல்ஹாட் அவர்கள் நமது கோரிக்கையை ஏற்று தமிழகத்தின் டெல்டா பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த மூன்று நிலக்கரி சுரங்கங்களுக்கான டெண்டரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
விவசாயிகளின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து என்றென்றும் அவர்களுடன் துணை நிற்பவர் நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள். தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக பாஜக சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று பதிவிட்டு இருந்தார்.
இதற்கு நடிகையும் தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்டவருமான காயத்ரி ரகுராம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "டெல்டா நிலக்கரிச் சுரங்கத் தடைக்கு அண்ணாமலைக் கடிதம்தான் காரணம் என்று வார்ரூம் பரவி வருகிறது. ஹஹஹா ! பணம் கொடுத்த விளம்பரம். கடிதம் கொடுக்கவில்லை என்றால் தடை இல்லையா?
தமிழ்நாடு மக்கள், மாநில அரசு ஒருபோதும் அனுமதித்திருக்காது. டெல்டா நிலக்கரியை தடை செய்யவில்லை என்றால் பாஜக தமிழகத்தில் நுழைய முடியாது. அண்ணாமலை கடிதம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான். ஏற்கனவே ஆருத்ரா மோசடியில் டோடல்டமாஜ்.
தமிழக சட்டசபையில் டெல்டாவில் நிலக்கரி சுரங்கத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. அண்ணாமலையின் கடிதத்திற்கு மத்திய அமைச்சர் போனபோதும் என்று பதில் அளித்தார். அண்ணாமலை ஒரு மேனேஜர் ஆச்சே, விட்டு கொடுக்க முடியுமா?" என கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார். இதற்கு அண்ணாமலையின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Gayathri Raguram has severely criticized Annamalai