எங்க அந்த என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்..?? அண்ணாமலையை கலாய்த்த காயத்ரி ரகுமான்...!! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தை அடுத்த சங்கராபுரத்தில் பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக தலைவர் அருண் தலைமை தாங்கினார். இவர் சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட தலைவராக பொறுப்பேற்ற பிறகு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல நிர்வாகிகளை மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதனை அடுத்து இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் பிளாஸ்டிக் சேர்களை கொண்டு தாக்கிக் கொண்டனர். இந்த இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலையை கிண்டல் செய்துள்ளார். நேற்று நடைபெற்ற கைகளுக்கு தொடர்பான வீடியோவை பதிவிட்ட அவர் "எங்கே அந்த என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்..? என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayathri Raguram has teased TNBJP president Annamalai


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->