தமிழகத்தில் ஆட்சி மாற்றம்... தமிழ்நாட்டின் மகளா? தமிழகத்தின் மகனா? அண்ணாமலைக்கு காயத்ரி ரகுராம் சவால்..!! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களின் மகனும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். அவரின் இறப்புக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திருமகன் ஈவராவின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோன்று தமிழக சட்டமன்றத்தில் திருமகன் ஈவேரா இறப்பிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதனை அடுத்து தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் கூடிய விரைவில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராமன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணாமலை போட்டியிட சவால் விடுகிறேன், நான் உங்களை எதிர்த்து நிற்பேன் என சவால் விடுகிறேன். உங்கள் நாடகம் மற்றும் போலி விளம்பரங்கள் டெல்லியில் வெளிவரட்டும்.

சவாலை ஏற்றுக் கொள்வீர்களா.? நான் தோற்றால் 5 நிமிடத்தில் நீங்கள் முதல்வராகி ஆட்சியை மாற்றலாம். நான் தமிழ்நாட்டின் மகள், நீ தமிழகத்தின் மகன். தமிழகமா அல்லது தமிழ்நாடு ஆ என்று பார்ப்போம்"என சவால் விடும் வகையில் பதிவிட்டுள்ளார். காயத்ரி ரகுராமனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gayatri challenged Annamalai ready to contest Erode by election


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->