பாஜகவில் ஐக்கியமாகும் தமாக..?! ஜி.கே வாசனுக்கு மத்திய அமைச்சர் பதவி..!! - Seithipunal
Seithipunal


கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தல் முதல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் தமாகவின் எதிர்காலம் குறித்து நடத்தப்பட்ட செயற்குழு கூட்டத்தில் ஆலோசனை வழங்கும்படி கட்சி நிர்வாகிகளை ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டார். 

அனைத்து நிர்வாகிகளும் கடிதம் மூலம் தங்களது கருத்துக்களை வழங்கும் படி ஜி.கே வாசன் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி சென்னையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற 324 நிர்வாகிகளும் கடிதம் எழுதிக் கொடுத்தனர்.

தமாகவின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற 70% நிர்வாகிகள் "ஜி.கே வாசன் மத்திய அமைச்சராக்க வேண்டும். அதற்கு கைமாறாக தமாக பாஜகவுடன் இணைக்க வேண்டும்" என வலியுறுத்திய கடிதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன் மூப்பனார் காலத்தில் தமாகவை காங்கிரசுடன் இணைக்கும் பொழுது இதே பாணியில் கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டு கடிதம் வாங்கப்பட்டது. அதேபோன்று தற்பொழுது ஜி.கே வாசனும் கடிதம் வாங்கியுள்ளார். வரும் பொங்கலுக்கு முன் தமாக பாஜகவுடன் இணையக் கூடும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan Party leaders support to merger with BJP


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->