#BREAKING :: அதிமுக கூட்டணியில் திடீர் திருப்பம்... கூட்டணி ஜெயிக்க வேண்டும்... ஜி.கே வாசன் பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவையொட்டி அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்தியா தேர்தல் ஆணையம் நேற்று இடைத்தேர்தல் குறித்தான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் தமிழகத்தில் அரசியல் தீ பற்றிக்கொண்டது. திமுக மற்றும் அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 

திமுகவை பொருத்தவரை கடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பதால் மீண்டும் அக்கட்சிக்கே ஒதுக்க வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை கடந்த தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டாலும் கட்சியை வேட்பாளர் யுவராஜ் அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் போட்டியிட்டார். இந்த நிலையில் நேற்று மாலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று காலை தாமாக அலுவலகத்தில் ஜி கே வாசனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சுமுகமான முடிவு எட்டப்பட்டு இன்று அல்லது நாளைக்குள் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து பேசிய ஜி.கே வாசன் "கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில்நாங்கள் போட்டியிட்டோம்.

இம்முறை அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஓரிரு நாளில் கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி வேட்பாளரை அறிவிப்போம்" என தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் தமாகா போட்டிட வாய்ப்புள்ளது என தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan said AIADMK alliance should win in erode by elections


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->