பாமக தலைவர் ஜிகே மணிக்கு, தமாகா தலைவர் ஜிகே வாசன் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.!! - Seithipunal
Seithipunal


பா.ம.க வின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிவரும் சட்டமன்ற உறுப்பினரான ஜி.கே. மணி அவர்களுக்கு த.மா.கா சார்பிலே பாராட்டுக்கள் , வாழ்த்துக்கள் என ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜி கே வாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக கடந்த 25 ஆண்டுகளாக மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரான  ஜி கே மணி அவர்களுக்கு த.மா.கா சார்பிலே பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் . 

பா.ம.க வில் சாதாரண உறுப்பினராக செயல்படத் தொடங்கி படிப்படியாக கடின உழைப்பால் உயர்ந்து தலைவர் ஸ்தானத்தை அடைந்தவர்கள் . 
கட்சியினருக்கு நம்பிக்கையும் , ஊக்கமும் கொடுக்கும் வகையில் அவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கிறது . 

பா.ம.க வின் வளர்ச்சிக்காக , தொண்டர்களின் உயர்வுக்காக , தமிழக மக்களின் நலன் காப்பதற்காக பா.ம.க வின் நிறுவனர் ஐயா டாக்டர் . ராமதாஸ் அவர்கள் ஆற்றும் பணிக்கு , தலைவராக திரு.ஜி.கே. மணி அவர்கள் மேற்கொள்ளும் பணி மென்மேலும் வளர , சிறக்க , உயர - நல்ல உடல்நலத்துடன் நீடூடி வாழ த.மா.கா சார்பில் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GK Vasan Wish to GK Mani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->