இலாகா இல்லாத அமைச்சராகிறார் செந்தில் பாலாஜி.. ஆளுநரின் கடும் எதிர்ப்பையும் மீறி முதல்வர் அதிரடி..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அமைச்சரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்ததை அடுத்து அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் தற்பொழுது இருந்து வருகிறார். அமலாக்கத்துறை கைது செய்யப்பட்ட பொழுது அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் வகித்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆகிய துறைகளில் மின்சாரத் துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை அமைச்சர் முனுசாமிக்கும் கூடுதலாக வழங்கி தமிழக ஆளுநரின் ஒப்புதலுக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு காரணமாக அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்ததை ஏற்க மறுத்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பரிந்துரை கடிதத்தை தமிழக அரசுக்கு திரும்பி அனுப்பினார். 

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு மீண்டும் விளக்கம் அளித்து தமிழக அரசு சார்பில் பரிந்துரை கடிதம் இன்று அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை ஏற்க மறுத்துள்ள ஆளுநர் ஆர்.என் ரவி செந்தில் பாலாஜி மீது குற்றவியல் வழக்கு இருப்பதால் அமைச்சராக அவர் தொடர முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சர் முத்துசாமி மற்றும் தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கியுள்ள கூடுதல் துறைகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். எனினும் இலாக இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர ஆளுநர் ஆர்.என் ரவி எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில் தமிழக முதலமைச்சருக்கு இருக்கக்கூடிய நிர்வாக அதிகாரத்தை பயன்படுத்தி நேரடியாக அரசாணை வெளியிட வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இதன் மூலம் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தமிழ்நாடு அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்பொழுது ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi opposes Senthil Balaji continuation as minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->