#BREAKING : குஜராத் சட்டமன்றத் தேர்தல்: ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபா வெற்றி.! - Seithipunal
Seithipunal


1822 உறுப்பினர் சட்டசபைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 37 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

182 தொகுதிகளை கொண்ட குஜராத்தில் 156க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 18 இடங்களிலும், ஆம் ஆத்மி 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. 

பாஜகவின் இந்த மாபெரும் வெற்றியை, குஜராத் காந்தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி கொண்டு இருக்கின்றனர்.

குஜராத்தில் பிரமாண்ட தேர்தல் வெற்றியோடு 7வது முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றுகிறது. இதில் ஒரு இந்திய சாதனையும் அடங்கியுள்ளது. 

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிபாவா பாஜக சார்பாக ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ர போட்டியிட்டுள்ளார். இவருக்காக ரவீந்திர ஜடேஜா தீவிர பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் ரிவாபா 56.75 சதவீதம் பெற்றுள்ளதால் வெற்றி உறுதியாகியுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி வேட்பாளர் 23 சதவீதமும், காங்கிரஸ் வேட்பாளர் 15 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளனர்.

குஜராத் முன்னிலை நிலவரம்;
மொத்த தொகுதிகள்-182
பாஜக-156
காங்கிரஸ் -18
ஆம் ஆத்மி கட்சி -5
மற்றவை-3


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat assembly elections Rabindra Jadeja's wife Rivaba wins


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->