ரூ.11 கோடியில் 4 கோடி மத்திய அரசுக்கு வரி! உலக செஸ் சாம்பியன் குகேஷிற்கு வரிச்சலுகை கேட்கும் காங்கிரஸ் எம்பி! - Seithipunal
Seithipunal



உலக செஸ் சாம்பியனாக குகேஷ், தனக்கு கிடைத்த பரிசுத்தொகை  11 கோடியில் 4 கோடிக்கும் மேல் வரியாக கட்டும் நிலைக்கு ஆளாகி உள்ளதாகவும், மத்திய அரசு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என்றும், மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி சுதா வலியிறுத்தியுள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "உலக செஸ் சாம்பியனாக குகேஷ் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அவருக்குக் கிடைத்த பரிசுத் தொகை சுமார் 11 கோடியில் 4 கோடிக்கும் மேல் வரியாக கட்டும் சூழல் உண்டாகியிருக்கிறது. 

கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசுகள் விளையாட்டு வீரர்களுக்கு வரிச்சலுகை வழங்கியது போல், குகேஷுக்கும் வரிச்சலுகை வழங்கினால் அது இளம் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதாக அமையும். 

அதே போல் குகேஷின் சாதனையை கௌரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வழியில் ஒன்றிய அரசும் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும். 

நடப்பு குளிர்காலக் கூட்டத்தொடரில் குகேஷின் சாதனையை பாராட்டி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். 

உலக சாதனையை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும்" என்று எம்பி சுதா வலியிறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gukesh Tax Issue Congress MP BJP


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->