தற்குறிகளின் கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என ஜோதிமணியை சாடிய எச்.ராஜா! - Seithipunal
Seithipunal


இந்திய வரலாற்றை தெரியாத இத்தாலியரை தலைவராக ஏற்றுக் கொண்டவர் ஜோதிமணி!

மதுரையில் அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உட்பட 1000 பேர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பின்போது செய்தியாளர் ஒருவர் "நீங்கள் ஹிந்து மாதத்தின் பிரிவினைக்காக வெற்றிமாறன் போன்றோர் பேசுவதாக சொல்கிறீர்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பாஜகவின் மதவெறி பிரச்சாரத்திற்காக தான் ராஜ ராஜ சோழனை ஹிந்து என்று சொல்கிறார்கள் என ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த எச்.ராஜா "நான் சிவன் கோயிலுக்கு சென்றால் இந்து இல்லையா சைவனா! இல்லை நான் விஷ்ணு கோயிலுக்கு செல்வது இல்லையா! யாராவது படித்தவர்கள் பற்றி கேள்வி கேட்டால் பதில் சொல்லலாம். தற்குறிகளின் கேள்விகளை என்னிடம் ஏன் கொண்டு வந்து கேட்க வேண்டும். இந்திய வரலாற்றை படித்திருக்க வேண்டும். முகலாயர் படையெடுப்பிற்கு முன்பு உள்ள இந்திய வரலாற்றைப் படித்திருக்க வேண்டும். இந்த நாட்டைப் பற்றி தெரியாத இத்தாலிய கிறிஸ்துவரை தலைவராக ஏற்றுக் கொண்ட ஜோதி மணியிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும்" என கடுமையாக சாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Raja said do not ask me stupid questions like Jyotimani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->