பாஜக எம்எல்ஏ.,வின் காரை கொளுத்திய மர்ம நபர்கள்.!  - Seithipunal
Seithipunal


ஹரியானா மாநில பாஜக எம்எல்ஏ எம்எல்ஏ ஒருவரின் காரை, மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

அரியானா மாநிலம், சண்டிகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தங்கும் விடுதிகள், பானிபட் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பிரமோத் குமார் (பாஜக) நேற்று அங்கு தங்கியிருந்தார்.

நேற்று நள்ளிரவு அந்த விடுதிக்குள் நுழைந்த மர்ம நபர்கள், பாஜக எம்எல்ஏ பிரமோத்குமார் சொகுசு காரின் கண்ணாடிகளை உடைத்து விட்டு, பின்னர் அந்த சொகுசு காருக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.

உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் காரின் முன்பகுதி கடுமையாக தீயினால் சேதமடைந்தது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை உடைத்த நபர்களின் முகங்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகவில்லை. அதே சமயத்தில் இந்த  குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ தெரிவிக்கையில், எனக்கு யாரிடமும் முன்பகை இல்லை. எதற்காக என் கார் தீ வைத்து கொளுத்தப்பட்டது என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. விரைவில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்வார்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana BJP MLA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->