ஒட்டுமொத்த இந்தியாவிலேயே சாம்பியனாக திகழ்கிறார்...!!! அவரைக் கொண்டாட வேண்டியது நம் கடமை...! - கமலஹாசன்
He champion entire India our duty celebrate him Kamal Haasan
மக்கள் நீதி மையம் கட்சித் தலைவரும், நடிகருமான ' உலகநாயகன் கமல்ஹாசன்' தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,"தமிழ்நாடு முதல்வர், என் அன்பிற்கினிய நண்பர் மு.க. ஸ்டாலினையும், தமிழ்நாடு துணை முதல்வர், பாசத்துக்குரிய தம்பி உதயநிதி ஸ்டாலினையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன்.
உச்சநீதி மன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி, ஆளுநருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்.
மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க. ஸ்டாலின்.
அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம் கடமை" எனத் தெரிவித்துள்ளார். இதுபோன்று ஒற்றுமையாக உறுதுணையாக இருப்பது பலருக்கும் முன்மாதியாக இருக்கும் என்று பலர் தங்களது பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
He champion entire India our duty celebrate him Kamal Haasan