மக்களே உஷார் - நான்கு நாட்களுக்கு வெளியே போகாதீங்க.!
heat increase in tamilnadu
தமிழகத்தில் கோடை காலத்தில் வெயில் கொளுத்தி எடுத்தாலும் அவ்வப்போது பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்தது. அதனைத் தொடர்ந்து தென் மேற்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு எதுவும் இல்லாமல், மீண்டும் வெப்பம் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதாவது, 3 டிகிரி பாரன்ஹீட் முதல் 5 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இருப்பினும், தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
heat increase in tamilnadu