ஹிஜாப் விவகாரம் : இஸ்லாமிய பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் திட்டமிட்ட சதி - கேரளா ஆளுநர் ஏ.எம்.கான்.!
hijab kerala governor amkhan
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்லூரிக்கு வருவதற்கு, அந்தக் கல்லூரியில் படிக்கும் மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இந்து மாணவர்கள் காவி துண்டுகளை அணிந்துகொண்டு கல்லூரிக்கு வந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இஸ்லாமிய மாணவிகள், ஹிஜாப் அணிவது தங்களின் உரிமை என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதே சமயத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால், எங்களை காவியுடை அணிந்து வருவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று இந்து மாணவர்களும் காவி உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, இஸ்லாமிய மாணவிகள் தொடர்ந்த வழக்கு விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரள மாநில ஆளுநர் ஏ.எம்.கான் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதில்,
"ஹிஜாப் விவகாரம் சர்ச்சையை அல்ல., இது ஒரு திட்டமிட்ட சதி. இஸ்லாமிய இளம் பெண்களை அவர்களது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடைக்க திட்டமிட்ட சதியாக தான் நான் உணர்கிறேன்.
இஸ்லாமிய பெண் பிள்ளைகள், இஸ்லாமிய ஆண் பிள்ளைகளை விட மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் அவர்களை ஊக்கிவிக்காது" என்று கேரள மாநில ஆளுநர் ஏ.எம்.கான் தெரிவித்துள்ளார்.
English Summary
hijab kerala governor amkhan