மோசமான செயல்பாட்டிற்கு பொறுப்பேற்ற தேவேந்திர பட்னாவிஸ், ராஜினாமா வாய்ப்பை நிராகரித்த அமித் ஷா - Seithipunal
Seithipunal


18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, கருத்துக் கணிப்புகள் அனைத்தும் பொய்யானவை என நிரூபிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோசமான செயல்பாடு உள்கட்சி பூசலை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மோசமான செயல்பாட்டிற்கு மொத்தமாக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய முன்வந்த மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் முன்மொழிவை உயர்மட்டத் தலைமை நிராகரித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஃபட்னாவிஸ் அரசில் தொடர்ந்து பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள 48 இடங்களில் 41 இடங்களை பிரிக்கப்படாத சிவசேனா மற்றும் பாஜக வென்றன. ஆனால் 2024 மக்களவைத் தேர்தலில் இந்த முறை 17 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. மஹாராஷ்டிராவில், பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மகாயுதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

காங்கிரஸ், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் இணைந்து உருவாக்கிய மகா விகாஸ் அகாடி 30 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சாங்லியின் ஒரு தொகுதியில் சுயேச்சையான விஷால் பாட்டீல் வெற்றி பெற்றார். விஷால் பாட்டீல் மற்ற கட்சிக்கு எதிராக கலகம் செய்து தேர்தலில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரை தோற்கடித்தார். சுயேச்சை எம்.பி விஷால் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் மோசமான செயல்பாடு காரணமாக துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தானே முன்வந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். முடிவுகள் வெளியான மறுநாளான புதன்கிழமை ஃபட்னாவிஸ் பதவி விலக முன்வந்தார். புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்குப் பிறகு, மகாராஷ்டிர மாநிலத்தின் மகாயுதி தலைவர்கள் பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் தவிர, அமித் ஷா, ராஜ்நாத் சிங், தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது, ​​ஃபட்னாவிசின்  ராஜினாமா கடிததை நிராகரித்துவிட்டு தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக் கொண்டார். 

இந்த முறை நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உ.பி. மற்றும் இரண்டாவது அதிக எம்.பி.க்களை அனுப்பும் மகாராஷ்டிராவில் இருந்து பாஜக பலத்த அடியை சந்தித்துள்ளது. உ.பி மற்றும் மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, 2019-ல் பாஜக பெற்ற 303 இடங்கள் இப்போது நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் 240 ஆகக் குறைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 293ஆகா உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

home minister amit shah rejected fadnavis resigning letter


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->