நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்!... இபிஎஸ்-க்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால்! - Seithipunal
Seithipunal


எடப்பாடி பழனிசாமி அரசு திட்டங்கள் தொடர்பாக நேரடி விவாதத்திற்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் என்று,  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்னை விவாதத்திற்கு அழைத்தால் செல்ல தயார் என்றும், அரசு திட்டங்கள் தொடர்பாக நேரடி விவாதத்திற்கு என்னை அழைத்தால் நான் செல்வேன் என்று கூறியுள்ளார்.

மேலும், அரசின் திட்டங்களுக்கு பெயர் வைப்பது தொடர்பாக விமர்சனம் எழத்தான் செய்யும் என்று கூறிய அவர்,  திட்டங்களுக்கு யார் பெயரை வைக்க வேண்டுமோ அதைத்தான் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

முன்னதாக அரசின் திட்டங்கள் குறித்து நேரடியாக  விவாதம் நடத்த முதலமைச்சர் வருவாரா என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பிய நிலையில், உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்து பேசியுள்ளார். இதன் காரணமாக தமிழக அரசியல் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது குறித்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I am ready to discuss face to face deputy chief minister udhayanidhi stalin challenge to eps


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->