பகத் சிங்கை போல் நானும் தூக்கு மேடை ஏறத் தயார் - அரவிந்த் கெஜ்ரிவால்! - Seithipunal
Seithipunal


டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மீ அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "பாராளுமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு நேற்று வெளியாகியதில் உண்மையில்லை. 

நான் உறுதியாக சொல்கிறேன். இதை எழுத்துப்பூர்வமாக குறித்துக் கொள்ளுங்கள். இந்த கருத்துக்கணிப்புகள் அனைத்தும் போலியானவை தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ராஜஸ்தானில் மொத்தமே 25 இடங்கள் தான் உள்ளன. ஆனால் அங்கு பாஜக 33 இடங்களில் வெல்லும் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. 

இது எப்படி சாத்தியம்? அவர்கள் ஏன் போலியான கருத்துக்களை பரப்புகிறார்கள்? அவர்கள் இதன் மூலம் இயந்திரங்களை கையாள முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். யாரை வேண்டுமானாலும் போலி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து சர்வாதிகாரம் செய்கிறார்கள்.

நான் இந்த சர்வாதிகாரத்திற்கு எதிராகத் தான் போராடுகிறேன். அதிகாரம் சர்வாதிகாரமாக மாறும் போது சிறையும் பொறுப்பு என்று கூறிய பகத் சிங் நாட்டுக்காக தூக்கிலிடப்பட்டார். இன்று ஜெயிலுக்கு போகும் நான் எப்போது வருவேன் என்று தெரியாது. ஒருவேளை நானும் தூக்கிலிடப்படலாம். அதற்கும் நான் தயாராகத் தான் செல்கிறேன் " என்று கூறிய கெஜ்ரிவால், திஹார் சிறைக்குச் செல்வதற்கு முன் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I Am Ready to Hung Like Bhagat Singh Aravind Gejriwal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->