மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக நான் வாக்குமூலம் அளிக்கவில்லை - அரவிந்த் கெஜ்ரிவால் !! - Seithipunal
Seithipunal


100 கோடி ரூபாய் முறைகேடு மதுபான ஊழல் வழக்கில்,  தலைநகர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் , மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக நான் வாக்குமூலம் அளித்ததாக சிபிஐ கூறுகிறது. இது முற்றிலும் தவறானது. மணீஷ் சிசோடியா நிரபராதி. ஆம் ஆத்மி கட்சி முற்றிலும் அப்பாவி என்றும் மேலும், நானும் ஒரு நிரபராதி என்று தெரிவித்தார்.

டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்த விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நிலை திடீரென மோசமடைந்தது. அவர் தனக்கு சர்க்கரை அளவு குறைந்து வருகிறது என தெரிவித்தார். இதை தொடர்ந்து , அவருக்கு டீ, பிஸ்கட் சாப்பிட நீதிமன்றம் அனுமதி அளித்தது.

தலைநகர் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்த ஊழல் வழக்கு விசாரணையின் போது, ​​முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதாவது  அரவிந்த் கெஜ்ரிவால் எந்த வகையிலும் சிறையில் இருந்து வெளியே வராமல் தடுக்க இந்த முழு அமைப்பும் முயற்சிக்கிறது என்றும், மேலும், இது சட்டம் அல்ல, சர்வாதிகாரம். இது ஒரு அவசரநிலை என்று அவர் குற்றம் சாட்டினார்.

இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், கடந்த ஜூன் 20 வியாழக்கிழமை  அன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததும், அமலாக்க துறை உடனடியாக அதற்கு தடை விதித்தது என்று தனது சமூக ஊடகம் X பக்கத்தில் ஒரு இடுகையில் தெரிவித்தார்.

மேலும், அடுத்த நாளே சிபிஐ அவரை குற்றவாளியாக்கியது. இன்று அவர் கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வராமல் இருக்க முழு அமைப்பும் முயற்சிக்கிறது என்று அர்த்தம், இது சட்டம் அல்ல சர்வாதிகாரம் என அவர் தனது X பக்கத்தில் தெரிவித்தார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I did not testify against Manish Sisodia said Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->