அருணாச்சல் மற்றும் சிக்கிம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவேன் - பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் சிக்கிம் மாநிலத்தில் தற்போது ஆளும் கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 26 இடங்களுக்கு மேல் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 44 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இரு மாநிலங்களுக்கும் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், "அருணாச்சல பிரதேச மக்களுக்கு என் நன்றி. பாஜக மீது நம்பிக்கை வைத்துள்ள இந்த மக்களுக்காக மற்றும் இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்காக நாங்கள் இன்னும் சிறப்பாக பாடுபடுவோம்.

மேலும் சிக்கிமின் எஸ் கே எம் கட்சிக்கும் எனது வாழ்த்துக்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு மாநில அரசுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன். மேலும் சிக்கிமின் வளர்ச்சியிலும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் பாஜக எப்போதும் தீவிரமாக இருக்கும்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I Will Fulfill the Wishes of Peoples in Arunachal and Sikkim PMModi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->