ஒடிசா அமைச்சரவையில் இடம் பிடித்த தமிழர்!! யார் இந்த வி.கே பாண்டியன்? முழு விவரம் இதோ!!
Ias officer VKPandian appointed as 5t odisa chairman like cabinet minister
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேய பாண்டியன் 2000 ஆம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் முடித்த பிறகு கடந்த 2002ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் கலஹண்டி மாவட்டத்தில் துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் படிப்படியாக பதவி உயர்வு பெற்று கடந்த 2011 ஆம் ஆண்டு ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகவும், அவரது வலதுகரமாகவும் இருந்து வருகிறார்.
ஒடிசா மாநில அரசாங்கத்திலும் அரசியலிலும் நவீன் பட்நாயகிக்கு அடுத்த இடத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக கார்த்திகேய பாண்டியன் வலம் வரும் நிலையில் அவர் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி தனது ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப வாய்ப்பு பெறுவதாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.
கார்த்திகேய பாண்டியனின் விருப்ப ஓய்வு கடிதத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிஜு ஜனதா தளம் சார்பில் கார்த்திகேய பாண்டியன் களமிறங்க உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு முன்னதாக தற்போது ஓடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சுரேந்திர குமார் வெளியிட்ட அரசு உத்தரவில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் 5டி திட்டம் மற்றும் நபின் ஒடிசாவின் தலைவராக கார்த்திகேய பாண்டியன் நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இந்த பதவியானது கேபினட் அமைச்சருக்கு இணையானதாக கருதப்படுவதால் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கீழ் நேரடியாக பணியாற்றுவார் என தெரியவருகிறது.
சமீபத்தில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் சந்தித்தபோது கார்த்திகேய பாண்டியன் மட்டுமே உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திகேய பாண்டியனின் ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சப்தகிரி உலகா, ஒடிசா மாநில முதல்வராக கார்த்திகேயன் பாண்டியன் பதவியேற்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என விமர்சனம் செய்துள்ளார்.
அரசியலில் இறங்குவதற்காகவே கார்த்திகேய பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஒடிசா மாநில பாஜக தலைவர் மோகன் குற்றம் சாட்டி உள்ளார். இப்போது அவரால் ஐஏஎஸ் முகமூடி இல்லாமலேயே வெளிப்படையாக அரசியல் செய்ய முடியும் எனவும் அவரை ஒரிசா மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Ias officer VKPandian appointed as 5t odisa chairman like cabinet minister