2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்...அரசிதழில் வெளியீடு!
Governor gives assent to 2 bills Published in the Gazette!
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.இது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது ஆகிய இரண்டு சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்களை அரசு நியமிப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் கனிமங்களைக் கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்னசைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக் கல், தீக்களிமண், உருட்டு களி மண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது என்றும் இதைத்தவிர்த்து, தமிழகத்தில் பதவிக்கலாம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது..https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fseithipunal%2Fvideos%2F1650448928922555%2F&show_text=false&width=267&t=0
English Summary
Governor gives assent to 2 bills Published in the Gazette!