ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்கள்..பட்டியலிட்ட எடப்பாடி பழனிசாமி! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே, தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், பெண்களின் நலன்களுக்காகவும் சிறப்பான திட்டங்களை அறிவிப்பதில் முதன்மையாகத் திகழ்ந்தவர் அம்மா தான் என்பதை நான் இங்கு பெருமையோடு நினைவு கூறுகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-பெண்ணின் விடுதலையைப் பறைசாற்றியதில் மகாகவி பாரதிக்குப் பெரும் பங்கு உண்டு என்றும் பெண்ணின் விடுதலைக்காக அவர் எழுச்சியூட்டும் வகையில் பாடிய பாடல் வரிகளை உள்வாங்கி, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக, பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைத் தீட்டி அவற்றையெல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் "மக்களால் நான், மக்களுக்காகவே நான்" என்ற தாரக மந்திரத்தை முழங்கி, தமிழக அரசியல் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த புரட்சித் தலைவி அம்மாவின் தலைமையிலான பொற்கால ஆட்சியில், பெண்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்காக செயல்படுத்திய திட்டங்கள் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.

அதன்படி ,பெண் சிசுக் கொலையைத் தடுக்க 'தொட்டில் குழந்தை திட்டம்'கொண்டுவந்தார் . பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம். அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்கொண்டுவந்தார். மேலும் பெண் கமாண்டோ படை. பெண்களின் பணிச் சுமையைக் குறைத்திட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் கொண்டுவந்தார் என கூறியுள்ளார்.

மேலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம். மாணவ, மாணவிகளுக்கு மடிக் கணினி வழங்கும் திட்டம்கொண்டுவந்தார். அதேபோல உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு.பெண் கல்வியை ஊக்குவிக்க ரொக்கப் பரிசு. நாட்டிலேயே முதன் முறையாக பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் போன்றவற்றை கொண்டுவந்தார்.

மேலும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுத் திட்டம். அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம். பெண் உடல் எடை பரிசோதனைத் திட்டம் போன்றவற்றை கொண்டுவந்தார்.

அதனை தொடர்ந்து பெண்களுக்கான மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், மகப்பெறு உதவித் தொகையை 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்தியது மற்றும்  பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதத்தில் இருந்து 9 மாதங்களாக உயர்த்தியது.

இதேபோல பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை. பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் மற்றும்  அம்மாவின் பெயரை இன்ஷியலாகப் பயன்படுத்தலாம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்திட 'காவலன் செயலி' திட்டம் கொண்டுவந்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட 13 அம்ச திட்டம் கொண்டுவந்தார்.

இந்தியாவிலேயே, தமிழ் நாட்டு மக்களின் நலன்களுக்காகவும், பெண்களின் நலன்களுக்காகவும் சிறப்பான திட்டங்களை அறிவிப்பதில் முதன்மையாகத் திகழ்ந்தவர் அம்மா தான் என்பதை நான் இங்கு பெருமையோடு நினைவு கூறுகிறேன் என தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி,இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனர் என்றும் இன்றைய பெண்கள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணா கவும், புரட்சிப் பெண்ணாகவும் விளங்கி வருகின்றார்கள் என்றும் பெண்ணுரிமை வாழட்டும்! வளரட்டும்! என்ற வாழ்த்துதலோடு, மீண்டும் எனது இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fseithipunal%2Fvideos%2F1650448928922555%2F&show_text=false&width=267&t=0


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jayalalitha s plans Edappadi Palaniswami listed!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->