அசிங்கமாக இல்லையா? உதயநிதி போஸ்டரால் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கோவை இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் சிஎம்எஸ் மசூது என்பவர், கோவையில் ஒட்டியுள்ள ஒரு சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதில், கட்டைவிரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால், பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகம், கலைஞர் ரிட்டன்ஸ் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போஸ்டர் கோவையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும் இருக்கக்கூடிய இந்த போஸ்டரில், மிரட்டல் விடும் தோணியில் வாசகங்கள் இடம் பெறலாமா? இது என்ன மாதிரியான நாகரீக அரசியல் என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கியிருந்தனர்.

இந்த நிலையில், இந்த சுவரொட்டியை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்து முன்னணி கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரின் அந்த பதிவில், "வன்முறை தூண்டுதலில் உச்சக்கட்டம் இது..!!! திமுகழக பைத்தியங்களின் கட்டை விரலோ/தலையோ யாருக்கு வேண்டும் இங்கே?

யார் கேட்டார்கள் இவர்களிடம்? 
யாரை மிரட்டுகிறார்கள் இவர்கள்?

பொதுமக்கள் அதிகமாக நடமாடும் கோவை மணிகூண்டு பகுதியில் "பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்" போன்ற வாசகங்கள். அசிங்கமாக இல்லையா? என்று அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

IMK Arjun Sambath Condemn to DMK Udhay Poster


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->