மதம் மாறிய விசிக வன்னி அரசு இந்து மதத்தை விமர்சிக்கும் துரோகி.. இட ஒதுக்கீட்டு சலுகைகளை பறிக்க வேண்டும் - அர்ஜுன் சம்பத் பரபரப்பு அறிக்கை!
IMK Arjun Sambath condemn to VCK Vanni Arasu
இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் விடுத்துள்ள அறிக்கையில், "அம்பேத்கரின் கொள்கைகளுக்கு துரோகம் செய்யும் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் வன்னி அரசு!
வன்னியரசின் மனைவி பெயர் ஜெமிமா ஆலீஸ்.....இவர்களை பொருத்தவரை இந்துமதம் சலுகைக்காக மட்டுமே பயன்படுகிறது!
மதம் மாறிவிட்டு இந்து மதத்தை விமர்சிக்கும் துரோகிகளின் இட ஒதுக்கீட்டு சலுகையை பறிப்பதே தேச நலனுக்கு உகுந்த ஒன்றாகும்.
இதுல ஒன்றை கவனிச்சீங்களா?!! குடும்பத்தில யாருக்குமே வருமானம் கிடையாது!
மதம் மாறிச் சென்றவர்கள் பட்டியல் இன மக்களுக்கான இட ஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவிக்க முடியாது.
என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் அம்பேத்கர்.
இப்படி செய்வது மோசடித்தனம் என்பதோடு சட்ட விரோதமாகும்.
சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி இந்து என சான்றிதழ் பெற்றுக்கொண்டு கிறிஸ்தவர்களாக, முஸ்லிமாக வாழ்ந்து வரும் இவர்கள் கபடநாடகம் போடுகிறவர்கள்.
இவர்கள் அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு துரோகம் செய்கின்றவர்கள்.
அரசாங்கம் இவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து என்று ஜாதி சான்றிதழ் பெற்றிருக்கின்ற இவர்களின் ஜாதி சான்றிதழை ரத்து செய்ய வேண்டும். பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டு சலுகைகளை பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
IMK Arjun Sambath condemn to VCK Vanni Arasu