ஒத்திவைப்பு!!! கடும் அமளி!!! மக்களவை, மாநிலங்களவையில் நிகழ்ந்தது என்ன?
Huge uproar Lok Sabha and Rajya Sabha Adjournment
டெல்லியில் இன்று பாராளுமன்றத்தில் காலை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. இன்றைய அலுவல் நேரத்தில் பல்வேறு மசோதாக்கள் குறித்த விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில்,மக்களவையின் இன்றைய அலுவல் தொடங்கியதும் நீதிபதி வீட்டில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
மேலும் இதன் காரணமாக கடும் அமளி ஏற்பட்டதையடுத்து மக்களவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.இதேபோல் மாநிலங்களவையில் கர்நாடக மாநிலத்தில் முஸ்லீம்களுக்கு 4 % இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பா.ஜ.க.வினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது. இது தற்போது பாஜகவினரால்தான் இந்த ஒத்திவைப்பு ஏற்பட்டதென அரசியல் ஆர்வலர்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Huge uproar Lok Sabha and Rajya Sabha Adjournment