சினிமாவை பார்த்து மக்கள் கெட்டுப் போகிறார்கள்..? நடிகர் பிருத்விராஜ் நச் பதில்..!
Are people getting spoiled by watching cinema Actor Prithvirajs answer is
மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் பிருத்விராஜ். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'ஆடு ஜீவிதம்' மற்றும் 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற இரண்டு படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றது. இவர் தமிழில் 'கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிருத்விராஜ் இயக்குனராக 'எல் 2 எம்புரான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 27-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிருத்விராஜ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சினிமாவில் நடிக்கும் வன்முறை காட்சிகளை பார்த்து கேட்டுப் போகிறார்கள் என பொதுப்படையாக மக்கள் விமர்சிக்கிறார்கள் என அவர் தெரிவித்துள்ளத்தோடு, இதற்கு அவர் தெளிவான விளக்கமளித்துள்ளார்.

அதாவது, "சமூகத்தில் என்ன நடந்தாலும் சினிமாவைப் பார்த்து கெட்டு போய்விட்டார்கள் என்று சொல்கின்றனர். ஆனால், சினிமாவே சமூகத்தின் பிரதிபலிப்பு தான் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ''சினிமா ஒன்றும் காற்றில் இருந்து உருவாக்கப்படவில்லை. அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் கதைகள் எல்லாம் சமுதாயத்தில் நடப்பவை தான். சினிமா ஒரு கற்பனை என்றால், அந்த கற்பனை உருவாவது உங்களைச் சுற்றிய உலகத்தில் இருந்துதான்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Are people getting spoiled by watching cinema Actor Prithvirajs answer is