ஜாலி!!! ரசிகர்களே கஜினி 2 படத்தின் அப்டேட்க்கு தயாரா? - ஏ.ஆர் முருகதாஸ்
AR Murugadoss share update of Ghajini 2
தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை உருவாக்க திரையுலகினர் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இதன் பட்டியலில் ஏற்கனவே எந்திரன், விஸ்வரூபம், சந்திரமுகி,கலகலப்பு, பில்லா, சாமி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி வந்துள்ளன.

இந்நிலையில் 'கஜினி' படத்தின் 2 ம் பாகமும் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படம் 2005-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது.
இதில் சூர்யா,அசின், நயன்தாரா, பிரதீப் ராவத், ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் அமீர்கான் நடிக்க இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தற்போது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி 2-ம் பாகம் வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்து கூறும்போது, ''கஜினி 2-ம் பாகம் குறித்து எனக்கு சில யோசனைகள் உள்ளன.
தெலுங்கு தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கஜினி 2-ம் பாகத்தை உருவாக்க தீவிரமாக இருக்கிறார்.சரியான நேரத்தில் 2-ம் பாகத்தை எடுப்பது குறித்து முடிவு எடுப்போம்.
கஜினி 2 படத்தை ஒரே நேரத்தில் தமிழ், இந்தியில் உருவாக்குவோம். இதுகுறித்த பேச்சுவார்த்தை நடக்கிறது'' எனத் தெரிவித்தார்.இது தற்போது ரசிகர்களால் இணையதளத்தில் பரவி வருகிறது.
English Summary
AR Murugadoss share update of Ghajini 2