சிக்கியது முக்கிய ஆவணங்கள்!...வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை! - Seithipunal
Seithipunal


கடந்த 2011-16 காலத்தில் வைத்திலிங்கம் அமைச்சராக இருந்தபோது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு முறைகேடாக ரூ.27.90 கோடி லஞ்சம் பெற்றதாக அறப்போர் இயக்கத்தின் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் தற்போது அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அந்த வகையில்,  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்லத்தில் நேற்று காலை 15 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல், சென்னையில் வைத்திலிங்கம் குடியிருக்கும் எல்எல்ஏ விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து வைத்திலிங்கம் தொடர்பான மேலும் நான்கு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இவ்வாறு நேற்று ஒரே நாளில் சென்னை, தஞ்சையில் 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகவும், சோதனை முடிவில் இது குறித்து தெரிவிக்கப்படும் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வைத்திலிங்கம் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 இடங்களில் 2வது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றும் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Important documents caught vaithlingam related places searched today


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->