தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அகதிகளாக உள்ள ஈழத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்டகால விசா: ராஜ்யசபாவில் வைகோ வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் ராஜ்யசபாவில் வைகோ பேசியதாவது: ''இந்த மசோதா, குடியேற்றம் தொடர்பான முந்தைய நான்கு சட்டங்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதா கட்டற்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

குடியுரிமை (திருத்த) சட்டம், இயற்றப்பட்டபோது, இலங்கையிலிருந்து குடியேறிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான ஒரு ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

தற்போதைய மசோதா, உள்நாட்டுப் போரின் போது ஈழம், இலங்கையிலிருந்து இந்தியா வந்துள்ள தமிழ் அகதிகளை ஒழுங்குபடுத்துவதையும் கருத்தில் கொள்ளவில்லை. மண்டபம் மற்றும் பிற அகதிகள் - மறுவாழ்வு முகாம்களில் சுமார் 90,000 தமிழ் அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தவிக்கின்றனர். 

நீண்ட கால விசா வழங்குவதற்கு இரக்கமுள்ள மற்றும் நடைமுறை அணுகுமுறை மிகவும் அவசியம். ஏனெனில் அவர்கள் தங்கள் நாட்டில் நடைபெற்ற வன்முறை மற்றும் இன துன்புறுத்தல் காரணமாக கடவுச் சீட்டு இல்லாமல் தப்பி வந்து, இந்தியாவில் அகதிகளாக தங்கி உள்ளனர். 

நீண்ட கால விசாவுக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து அளவுகோல்களையும் நிறைவு செய்கிறார்கள். அவர்களை சட்டவிரோத குடியேறிகள் என்று முத்திரை குத்தக்கூடாது. எனவே, 1986 செப்டம்பர் 23 அன்று வெளியிடப்பட்ட உள்துறை அமைச்சக உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

எனவே, 40 ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலும், வெளியிலும் தமிழ் அகதிகள் தவித்து வருவதால், அவர்களின் தற்போதைய சவால்களைப் போக்க, குடியுரிமைச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் இந்திய குடியுரிமை அல்லது நீண்ட கால விசாவுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று இவ்வாறு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indian citizenship or long term visa for Eelam Tamils ​​who have been refugees in Tamil Nadu for over 40 years Vaiko


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->