ஆன்லைன் ரம்மியும், கேண்டி கிரஷ்ம் ஒன்றா? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!
Online Rummy chennai highcourt TN Govt
ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு விதித்த நேரக் கட்டுப்பாட்டுக்கு எதிராக, விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கில், தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட முக்கிய வாதங்கள்:
ஆன்லைன் ரம்மி தனிநபருக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கிறது. மாநில அரசுக்கு ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்தும் முழு அதிகாரம் உள்ளது.
அதை கட்டுப்படுத்துவது அரசின் பொறுப்பு மட்டுமல்ல, கடமையும் ஆகும். விளையாடுபவர்களின் விவரங்களை கோருவது, அந்தரங்க உரிமை மீறல் என கொள்ள முடியாது.
கேண்டி கிரஷ் போன்ற பொழுதுபோக்கு விளையாட்டுகளோடு, பணம் வைத்து ஆடும் ரம்மியை ஒப்பிடுவது முற்றிலும் தவறு என தமிழக அரசு வாதங்களை முன்வைத்தது,
English Summary
Online Rummy chennai highcourt TN Govt