திருட்டு வழக்கில் தொடர்புடையவருக்கு முதல்வர் பரிசு - அசாமில் அதிர்ச்சி சம்பவம்!
Asam CM Award Controversy
அசாமில் 2025-ம் ஆண்டிற்கான சிறந்த குடிமக்கள் பட்டியலில் திருட்டு வழக்கில் தொடர்புடைய நபரின் பெயர் இடம்பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசாமின் அஸ்ஸாமீஸ் புத்தாண்டு ரொங்காலி பிஹுவை முன்னிட்டு, மாநில அரசு சிறந்த குடிமக்களுக்கு "கமோசா" (பாரம்பரிய துண்டு) வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு லக்ஷ்மிபூர் மாவட்டத்தின் பொசகோன் கிராமத்தைச் சேர்ந்த சிதா தாஸின் பெயரும் பட்டியலில் இடம் பெற்றது.
பரிசு வழங்கப்பட்ட ஏப்.2 அன்று, அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதால், இந்த விவகாரம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மேலும், உள்ளூர் பத்திரிகைகளிலும் இது பெரிதாக வெளிப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசாம் அரசு விளக்கம் அளித்த போது, முதல்வர் பரிசின் பட்டியலில் அவரது பெயர் எவ்வாறு இடம் பெற்றது என்பது தெரியாது என்றும், அளிக்கப்பட்ட உத்தரவின்படி மட்டுமே பரிசு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிடா தாஸ், 2016 முதல் பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகள், இன்வெர்டர் மற்றும் வாகன பேட்டரிகளை திருடியதாக இதுவரை நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
English Summary
Asam CM Award Controversy