அடுத்தடுத்து சோகம் - நடிகர் அவர்கள் ரவிக்குமார் காலமானார்.!
actor avarkal ravikumar passed away
நமது அண்டை மாநிலமான கேரளாவை சேர்ந்தவர் நடிகர் 'அவர்கள்' ரவிக்குமார். இவர் 70-களில் பல மலையாள படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். முதன் முறையாக 'உல்லாச யாத்ரா' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
தமிழிலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். அதன்பிறகு மலபார் போலீஸ், ரமணா, மாறன், விசில், சிவாஜி, வியாபாரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். அதுமட்டுமல்லாமல், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், நடிகர் "அவர்கள்" ரவிக்குமார் உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை அவருடைய மகன் உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் 'அவர்கள்' ரவிக்குமாரின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு முன்னதாக பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் குமார் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
actor avarkal ravikumar passed away