பிக் பாஸ் பிரபலம் தர்சன் கைது - நடந்தது என்ன?.
bigg boss celebrity dharsan arrested
வீட்டு வாசலில் கார் நிறுத்தியது தொடர்பாக ஏற்பட்ட தாக்குதலில் பிக் பாஸ் பிரபலம் தர்சன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் போட்டியாளர் தர்ஷன் இன்று காலை ஜிம்மில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது, அவரது வீட்டு வாசலில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இதனால், அவர் வீட்டிற்குள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து அவர் அருகிலுள்ள கடைகளில் விசாரித்தார். அங்கிருந்த ஒரு குடும்பத்தினர், ’இது எங்களுடைய கார்’ என்று தெரிவித்தார்.

இதையடுத்து தர்சன் காரை உடனே எடுக்க கூறிய நிலையில், அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த, வாக்குவாதம் சிறிது நேரத்தில் தீவிரமடைந்து கைகலப்பு ஏற்பட்டது.
இந்தத் தாக்குதல் குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் விசாரணை நடத்தி நடிகர் தர்ஷன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரையும் அவரது தம்பியையும் கைது செய்துள்ளனர்.
English Summary
bigg boss celebrity dharsan arrested