உதயநிதிக்கு 2 சீட் உறுதி... மேற்கில் களமிறங்கும் இளைஞரணி.!! - Seithipunal
Seithipunal


நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக தலைமையிலான கூட்டணியில் பெரும்பாலான கட்சிகளின் தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. திமுக தலைமையில் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்கு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.

கடந்த 2019 தேர்தலை போன்று திமுக கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கியுள்ளது. அதேவேளையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் இளம் தலைமுறையினரை களம் இறக்கவும் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இரண்டு தொகுதிகளை திமுகவின் இளைஞரணிக்கு வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று மாலை 6 மணியுடன் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விருப்பம் அணுக்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவுற்ற நிலையில் ஈரோடு தொகுதியில் போட்டியிட திமுக இளைஞரணி துணைச் செயலாளர் பிரகாசம் சேலம் தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை அறங்காவலர் பி.கே பாபு விருப்பமான தாக்கல் செய்துள்ளார். இவர்கள் இருவருக்கும் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info DMK allocate 2 seat to youth wing in kongu belt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->