தீபாவளிக்கு பின் பொது சிவில் சட்டம் அமல்? வெளியான பரபரப்பு தகவல்!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது பாஜகவின் கொள்கையாக இருந்து வரும் நிலையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்துடன் போது பொது சிவில் சட்டம்  நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி பண்டிகைக்கு பின் ஒரு வாரம் கழித்து சிறப்பு கூட்டத்தொடர் கூட்டி அந்த கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு அமல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த மசோதாவில் அனைத்து மதங்களுக்கும் பொதுவான பாலின சம உரிமை, பூர்வீக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை, திருமணம், விவகாரத்து, பரம்பரை சொத்துரிமை, தத்து எடுத்தல் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 லிருந்து 21 ஆக அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமண வயது 18 என தொடர எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிய வருகிறது. 

மேலும் லிவ் இன் வாழ்க்கை முறையை கட்டாய பதிவு செய்தல் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளதால் இந்த மசோதா சட்டமாக்குவதற்கு முன்பு பல விவாதங்கள் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info Union civil law will enforced after Diwali in Uttarakhand


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->