சென்னையில் பயங்கரம் - மாஞ்சா நூல் அறுத்து குழந்தை படுகாயம் - 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து இரண்டரை வயது குழந்தை படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் மனைவி மற்றும் தனது குழந்தையுடன் வியாசர்பாடி மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது, எதிர்பாராத விதமாக மாஞ்சா நூல் அறுத்து குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை மீது அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு குழந்தைக்கு ஏழு தையல் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மாஞ்சா நூலில் பட்டம் விட்ட கல்லூரி மாணவர், பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும், 100-க்கும் மேற்பட்ட பட்டங்கள் மற்றும் மாஞ்சா நூல்களை போலீசார் பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

four peoples arrested for manja thread cutting children neck


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->